மண்ணே உயிரே - குறிப்பும் சிந்தனையும்
அக்கினி சுகுமார் மலேசிய கவிஞர், பத்திரிக்கையாளர், மலேசிய அறிபுனை எழுத்தின் முன்னொடி. மண்ணே உயிரே என்பது 2002ல் தமிழீல விடுதலை போராட்ட தலைவர் பிரபாகரனுடன் நிகழ்த்தப்பட்ட அனைத்துலக பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கலந்துக்கொண்ட / இலங்கை பயண அனுபவ கட்டுரை நூல். 25 கட்டுரைகளை ஒரு இடத்திலிருந்தோ, ஒருவருடன் ஏற்பட்ட பேச்சு தொடர்பிலிருது எழுதுயிருந்ததால், எழுத அவருக்கும் வாசிக்க நமக்கும் இலகுவாக இருந்தது. இருந்தபோதிலும், அக்கினி அவர் எடுத்த பேட்டிகள் முழுமையாக எழுதவில்லையோ என்ற குறை உண்டு. இது வெறும் பயண நூலென்பதால் அவை பத்திரிக்கையில் வந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். பேட்டிகள் அச்சில் உள்ளதா என்று தெரியவில்லை. என்னைப்பொருத்த அளவில் அக்கினி மிதிவெடி அகற்றும் பிரிவின் ஒருங்கினைப்பாளர் பா. யோகனை கண்ட பேட்டி மிக முக்கியமானதாக கருதுகிறேன். யோகன் மிதிவெடிகளை அகற்றுதல், மிதிவெடிகளால் கால்களை இழந்தவர்களுக்கு செய்ற்கை கால் பூட்டுதல் பணிகளைச் செய்பவர். (செய்துவருகிறார்?). 1987ல்லிருது இந்த பணிகள் நிகழ்த்தப்டுகின்றன. ஸ்ரீலங்கா இராணுவத்தின் மிதிவெடிகள் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருது வாங்கியதாக...



