சொட்டுகள் - சுரேஷ் பிரதீப்


வாசிப்பனுபவம்

கதையில் வருவது மூன்று தலைமுறைகள். ஒருவர் ஆற்றில் குளிப்பவர், மற்றொருவர் பக்கட்டில் குளிப்பவர், மூன்றமவர் ஷவரில் குளிப்பவர்.

கதைசொல்லி இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவர். தனது அன்னையை வெல்லுவது ஒரு அவசியமாக இருக்கிறது. மிக கடுமையான வசை சொல்லினால் கதைசொல்லியை அவரது தாயார் திட்டுகிறார். இதெற்கெல்லாம் காரணம் தனது தாயாருக்கு பொறுப்பான கணவர் கிடைக்கவில்லை என்பதால் என கதைச்சொல்லி நினைத்துக்கொள்கிறாள். தாயாரமிருந்து, மல்லுக்கட்டி புனெவிற்கு வேலையாக சென்றுவிடுகிறாள்.

முதன் முதலாக தனது தனிமையையும், இச்சைகளையும் புனேவில் அனுபவிப்பதாக கதையில் வருகிறது. அந்த குளியலறை காட்சிகளை வாசிக்கும் போது முதிரா எழுத்து போல இருந்தது.

டெல்லியில் விக்னேஷை சந்திக்கிறாள். இவனே பின், கதைச்சொல்லியின் கணவனாகவும் அமைகிறான். கதைசொல்லிக்கு ஒரு நல்ல கணவன் அமைந்துவிட்டதாக தாயாரிடம் காட்டி அவளை வென்றுவிட வேண்டும். கதைசொல்லிக்கு ஓர் ஆண் தன்னை அங்கீகரிக்கத் தேவையாக உள்ளது. (Men Validation) அதற்குள் தாயார் காலமாகிவிடுகிறார். ஆனால், கதைச்சொல்லி நினைத்ததுபோல விக்னேஷ் ஓர் அரிய கணவனெல்லாமில்லை. வெளியுலகே தேவையில்லாத ஒரு வீட்டையும் குடும்பத்திற்காக கட்டிகொடுக்கிறார்.

கதைசொல்லியின் மகள் ரேகா. ரேகாவிற்கு சத்தம் பிடிக்கவில்லை. அப்படி சத்தமிட்டால் தான் இறப்பதாக கூறுகிறாள். ஷவரிலிருந்து நீர் சொட்டு சொடாக விழும் சத்தம் அவளை எரிச்சலடைய செய்கிறது. தாயாரை முட்டாள் என்றே கத்தவும் செய்கிறாள். அந்த பொழுதில் கதைசொல்லியின் தாயார் எப்படியெல்லாம் கதைச்சொல்லியைப் படுத்தி எடுத்திருப்பாரோ, அதை ஒரு சுழற்சியாக ரேகாவின் மீது திருப்பியடிக்க காத்திருப்பாள். தன்னிடமுள்ள அனலைச் சொட்டு சொட்டாக அணைத்து, சூட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் செயலிது என என் வாசிப்பு அமைந்தது.

 

விமர்சனம்

இந்த கதையில் கதைச்சொல்லியின் நினைவோடை அதீதமாக இருக்கிறது. சுரேஷ் பிரதீப் ஒன்றை முடிவெடுத்தப்பின், கதைபோல ஒன்றை எழுதியிருக்கிறார். உண்மையில் கதை என எதுவும் நிகழவில்லை. தாயாரிடம் இருக்கும் வன்மம் எப்படி கதைசொல்லியிடமோ, கதைசொல்லியிலிருந்து ஏன் மகளிடமோ செல்ல வேண்டிய கூறுகள் கதையில் குறைவாக அல்லது துண்டு துண்டாக இருக்கிறது. வாசகர் தன்னக்கு தானாகவே கொக்கி போட்டு கதையிடம் சென்று சேரச் சொல்கிறதே தவீர கதையாக அமையவில்லை.


(சுக்கிரி குழம நண்பர்களின் வாசிப்பு திரட்டு, 28.03.2026)

Painting : Lincoln Seligman, Painter & Sculptor

Comments