லித்தியம் - சுனில் கிருஷ்ணன்


நாதனும் மகேசும் இருபத்திறண்டு ஆண்டுகள் மணமாகியிருக்கும் தம்பதிகள். இவர்களுக்கு அருண் என்ற காலேஜ் செல்லும் மகனும் உள்ளார். நாதனுக்கும் மகேசுக்கும் கல்யாணத்திற்கு முன்பாக காதலர்கள் இருந்திருக்கிறார்கள். அந்தப் பிரிவின் பின் இருவரும் மணமுடிக்கின்றனர். 

விசிறியின் ஓசையில்லாமல் உறங்க முடியாத மகேசும் அந்த ஓசையினால் தூங்கமுடியாமல் இருக்கும் நாதனுக்கு ஒர் இரவு சண்டை வருகிறது. சண்டையில் நாதன் மகேசை இரு கண்ணங்களிலும் அறைந்துவிடுகிறார். மகேஸ் ஒரு நெடுங்குடிகாரி என நாதன் முற்றிலும் நம்புகிறார். 

மகேஸிடம் பல குறைகளை வைக்கிறார். மகேசுக்கு மாதவிடாய் காலங்களில் அமைதி வந்துவிடும், குழந்தை பிறந்தவுடன் பிரமை பிடித்தவளானாள், விருந்தாளிகள் வந்தால் anti-social-ஆக நடந்துக் கொள்கிறாள், இசை-ஓவியம்-இலக்கியம் என எந்தவொரு அறிவும் இல்லா ஞானசூனியமான நெடுங்குடிகாரி. 


நாதன் மகேசை உடலாலும் அறிவாலும் பிரச்சனைக்குரியவள் என அடையாளமிடுகிறார். மகேசால் சரியாக இயங்க முடியாது என்றும் தன்னாலான சமையல், அருணைப் பார்த்துக்கொள்ளுதல் எனும் வேலைகளையும் நாதனாகவே செய்துக்கொள்கிறார். இதனால், நாதன் மகேசை "மன்னித்து ஏற்று கொள்ளவும்" தயாராக உள்ளார். 

நாதனின் அறையில் ஒரு மீன் தொட்டி இருக்கும். அடைக்கப்பட்ட சிறு வெளியில் முட்டிக்கொண்டு வாழும் இரு உயிரினம். மகேசுக்கு அவளது அப்பா ஊட்டி நயந்த் மையலுக்கு அழைத்து சென்றதுதான் அவளிடமிருந்து வரும் முதல் செய்தியாக உள்ளது. இதிலிருந்து மகேஸ் திறந்த வெளியை விரும்புவராக, அல்லது சினிமா கலையில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார் என வாசிக்க முடிகிறது. தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் இப்படி உழைக்கும் நாதன் தன்னைவிட்டு ஏன் இன்னும் செல்லவில்லை என்ற கேள்வியுடன் இருக்கிறார். 

கதையில் விசிறி பேசும். அதனது மூன்றாவது ரெக்கை கூரையில் இடிப்பதால் நாதன் மூன்றவது ரெக்கையைக் கழற்றிவிட்டார். தாழ்ந்த சுவரில் இடிபடும் என விசிறியின் இரக்கையைக் கழற்றியிருக்கிறார். அந்த விசிறி இப்பொழுது ஊனமுற்றாதாக மாறியுள்ளது. வன்முறை என்பது அடிதடி உதையில் ஒன்றை ஊனமாக்கி விடுவதால்தால் நிகழும் என்பதில்லை, ஒருவரை மௌனத்தில் ஆழ்த்தினால் கூட அதுவும் ஒரு வன்முறைதான். 

மகேஸ் வரைந்த ஓவியம் ஒன்றை அவரது தோழி தந்து விட்டு செல்வார். ராதா கிருஷ்னர் இருவரும் ஒருத்தரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். அவர்களைப் பார்த்திருக்கும் பல ஆடிகள். முடிவில்லா காதலைச் சொல்லக்கூடிய ஓவியம். இத்தனை உயிர்ப்புடைய ஒரு மனதை முற்றிலும் அடக்கி சொத்தையாக்கிவிடும் காரணி என்னவாக இருக்கும் என்பதுதான் கதையின் சாராம்சம். 

கதையில் பர்ஸ் ஒன்று மகேஸின் வாழ்க்கையை அருகிலிருந்துப் பார்த்துச் சொல்லும். மகேசை யாரும் அறிவதற்கான வாய்ப்புகளே இங்கில்லை என்பதுதான் உண்மை. 

ஒரு nuclear குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகள் இக்கதையில் பேசப்பட்டுள்ளன. சரிநிகர் வீட்டு வேலைகளைச் செய்யும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட "இலட்சிய" கணவான்தான் இதற்கான தீர்வா என்ற கேள்வியை இக்கதை எழுப்புகிறது. 

சம மரியாதை இருக்கவேண்டிய இடத்தில் அனுதாபமிருப்பது இருப்பது ஒர் அமைதியான வன்முறை என்பதை அப்பட்டமாக கதை கூறுகிறது. இதனால், ஏற்கனவே தனி தனியான தீவுகளாகியிருக்கும் குடும்பங்கள் அந்த தீவுகளிலும் தனி அறைகளில் தனது தனி உலகங்களில் வாழும் தனியர்களாக ஒருத்தரை மாற்றுகிறது. 

நன்றி சுக்கிரி குழும நண்பர்களின் கலந்துரையாடல் 

21.03.2026

ஓவியம் : Two veiltail goldfish, 1936 by Ohara Koson 

Comments