மா. இராமையா படைப்புலக விமர்சனம்
மா. இராமையாவின் முதல் படைப்பாக அவரது சுய சரிதையான தேய்ந்த பாதைகள் படித்தேன். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை எளிய நடையில் எழுதியுள்ளார். அவர் நீண்ட காலத்திறகான எழுதியிருந்த கைபழக்கம் இருந்தமையால் ஒரு கச்சிதமான நாவல் படிப்பதன் அனுபவம் கிடைத்தது. அதோடு, ஜொகூரின் மலாய் தொன்ம கதைகளையும் உள்ளடக்கி எழுதியிருந்தார்; கோர்வையாக அல்ல, ஓர் ஆவணமாகதான். உண்மையாகவே, வாசிக்க நன்றாக இருந்தது.
மா. இராமையாவின் மொத்த வாழ்க்கையைப் பற்றி படித்துப்பார்த்தால், அந்நாளில் திராவிடக் கொள்கைகளுக்கு ஊறிப் போனவர்களுள் இவரும் ஒருவர் என்று தெரியவந்தது. தமிழர்கள் சஞ்சிக் கூலிகள், மலாய்காரர்களும் வந்தேறிகள், சோழர் பரம்பரை, ரப்பர் தோட்டம் எனும் வகையறாக்குள் இவரையும் அடக்கிவிட முடியும். இருந்தாலும், இவரை ஒரு எழுத்தாளராக எப்படி புரிந்துக்கொள்ளலாம் என்பதை என் புரிதலுக்கு ஏற்றவாரு விளக்க கடமைபட்டுள்ளேன்.
இராமையா ஜொகூரில் தங்காக் நகரில் பிறந்தார். இவரது அப்பா சியாமின் மரண இரயில்வே கட்ட அழைத்துச் செல்லப்பட்டார். ராமையாவின் உடன்பிறப்புகள் திருமணமாகியும், வேலை நிமித்தமுமாக வெவ்வேறு ஜொகூரின் மாவட்டங்களில் இருந்திருக்கிறர். அதனால் இராமையா அவரது அம்மாவுடன் வாழ்ந்து வந்தார்.
இளமையில் மா. இராமையா தமிழ், ஆங்கிலம், ஜப்பான், ஹிந்தி மொழிகளைக் கற்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். எந்நேரமும் கல்விக்கான உந்துதல் இவரிடம் இருந்துள்ளது. ஹிந்தி ஆசிரியர் ஒரு சிங் மதத்தவர். அந்த ஆசிரியரிடம் ஹிந்தி பாடம் கற்க சென்ற அனைவருமே தமிழ் பிள்ளைகள். அந்த ஆசிரியர் தமிழை கொஞ்சம் தரக் குறைவாகப் பேசவும், இவர் சினங்கொண்டு கிளம்பிப் போக, ஒரு 'தமிழ் சமூதாய தலைவராக' மற்ற பிள்ளைகளுக்கு காணப்பட்டுள்ளார். அப்பொழுது அவர் ஒரு 'பொடியன்' மட்டுமே. அவை மெல்ல வளர, பிற்காலத்தில் இந்த குணத்தை தெரிந்துக் கொண்ட அரசியலில் இருக்கும் கேடுவாதிகள் இவரை அரசியலுக்கு பலியாக்க முயற்சிசெய்தனர்.
ராமையாவின் சிறுவயதில் ஒரு மலாய் பள்ளியில் ஜப்பான் போர் வீரர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அவருக்கு 'மிலிடிரியில்' சேர ஆசை பிறந்தது. இராமையா அவரது ஆசையை அம்மாவிடம் சொல்ல, அம்மா 'எல்லோரும் என்னைவிட்டு சென்றால் நான் என்ன செய்வது' என அழுது அடம்பிடித்து ராமையாவை படிக்க வைத்துள்ளார். இராமையாவின் படிப்புக்கு அவர அண்ணனும் உடன் இருந்திருக்கிறார். இவர் திறமையாக படித்து தனது வேலையை அரசாங்க அலுவலில் தக்க வைத்துக் கொண்டார். இராமையாவின் வார்த்தைகளில் அது 'ஒராள் அஞ்சலகமாக' இருந்திருக்கிறது. இரு வருடங்களுக்கு ஒரு முறை வேறு அலுவலுக்கு மாற்றலாகி செல்ல மேலிடத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவ்வகையில் அவர், குளுவாங்க், சா ஆ, முவார், என்டாவ், தங்காக் என பல்வேறு இடங்களில் இருந்துள்ளார். - இதனால் இவரது கட்டுரைகளில் பழைய ஜொகூரின் வர்ணனைகள் இருக்குமெனவும் தோட்டபுறங்களைத் தவீர்த்து ஜொகுரின் நகரங்களைக் காட்டியிருப்பார் என நம்புகிறேன்.
சென்ற இடங்களில் எல்லாம், தமிழ் நேசன் 'தாளிதழை' தேடியுள்ளார். அப்படி கிடைக்கவில்லையெனில், அந்த நகரத்தில் தமிழ் வியாபாரிகளுடன் நட்பு கொண்டு அவருக்கு தமிழ் நேசன் ஏஜெண்ட் வாங்கிக் கொடுப்பது தலையான கடமையாக எடுத்துக் கொண்டுள்ளார். இவர் பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளில் தமிழ் நேசன் பற்றிய கொடுத்த நுண்தகவல்களை ஒப்பீட்டு பார்க்கையில் அப்போதே வந்து கொண்டிருந்த தமிழ் முரசு, Indian Daily Mail பற்றி ஒருவரிகூட எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Indian Daily Mail ஒரு கட்டத்தில் நிறுத்தப்படும் என்று செய்தி வந்தவுடன் தமிழ் நேசன் தமிழ் மலர் என்ற இதழை வெளியாக்கியது. அதற்கும் தனது முழு ஆதரவை வழங்கியவர் இராமையா. அதே போல் அவர் தமிழ் வகுப்பு பற்றி நல்வழியில் எழுதியிருந்தாலும், அவர்காலத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளனர் என பொத்தம் பொதுவாக விமர்சனத்தை வைக்கிறார்.
ஒரு எழுத்தாளராக இராமையா தன்னை நிறுவிய இடங்களும் உண்டு. ராமையா 'தமிழ்செல்வன்' எனும் புனைபெயரில் தமிழ்நேசனில் சிறுகதைகள் எழுதி வந்தார். ஒர் எழுத்தாளராக தன்னை நிறுவி தமிழ் நேச அன்பர்களுள் சற்றே புகழ் பெற்றிருந்த காலமது. அப்போது ஒரு இளவல் அதே புனைபெயரில் கவிதைகள் எழுதி அவை பிரசுரமாகவும் ஆயிற்று. என் புனைபெயரில் யார் இப்படி செய்வது என்று நேசன் பத்திரிக்கைக்கு எழுதினார். அவர்களோ, அந்த இளம் கவிஞரிடம் சொல்லிவிட்டாச்சு, இனிமேல் எழுதுவதென்றால், அப்பாவின் முதலெழுத்துடன் (inital) சேர்த்து தமிழ்செல்வன் என்ற புனைபெயரில் எழுதலாம் என்று அறிவுரை செல்லியுள்ளனர். ஆனால் அதே பையன் மீண்டும் இராமையாவின் புனைபெயரில் கவிதைகள் எழுதி அனுப்பியிருந்தான்.
இராமையாவுக்கு கோவம் வந்ததாம். அதனால், புலவர் குழந்தையின் 'யாப்பதிகாரத்தை' வாசித்து மரபுகவிதைகளைப் பயின்றுள்ளார். அதை படித்தவுடன் அவர் எண்ணம் பொசுங்கியது. விடாமல், சுயமாக மரபு கற்று தமிழ்செல்வன் என்ற பெயரில் மரபு கவிதைகள் எழுதி அனுப்பியுள்ளார். இதற்கு பின், அந்த பையன் கவிதைகள் அனுப்பவதில்லை, 'இளம் எழுத்தாளரின் சடர் அனைந்து விட்டது' என்று இராமையா வருந்தி எழுதியிருந்தாலும் இந்தச் சம்பவமே அவருக்கடுத்து வந்த இளம் எழுத்தாளர்களின் மீதிருந்த கசப்பின் தொடக்கப்புள்ளி என்று நினைக்கிறேன். இளம் எழுத்தாளர்களும் முதியவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளிக்கு காரணம் இளம் தலைமுறையினரே என்று நவீன் நிகழ்த்திய வல்லின நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ராமையாவின் 'தேய்ந்த பாதைகள்' சுயசரிதையை
இப்படி இன்னொருமுறை தன்னை எழுத்தாளராக நிறுவியுள்ளார்.

Comments
Post a Comment