சிண்டாய் (சிறுகதை) - அரவின் வாசிப்பனுபவம்
கதையில் வருபவர்கள் ஆவாங் மற்றும் கதைச்சொல்லி பெண்.
ஆவாங், சிண்டாய்க்கான அர்த்தம் மலாய் பட்டு என்பான். கதைச்சொல்லி பெண் அதே சொல்லுக்கு மீனாங் மொழியில் - இளவரசி எனும் பெயருண்டு என்பாள். அவள் சொல்வதை ஆவாங் உளப்பூர்வமாக ஏற்கமாட்டான். ஆவாங் கதைச்சொல்லியின் கண்களைப் பார்க்காமல், ஆமோதிப்பதைக் கதையில் கவணிக்கலாம்.
ஆவாங் பழுத்த செம்பணை குலைகளைச் சேகரிப்பவன். வேலை முடிந்ததும் ஓய்வு தேரத்தில் வாத்து, கோழி, மீன என வேட்டைக்குச் செல்பவன். பறவைகளைக் கவர்பவன். செய்ய ஒன்றுமில்லை என, எலிகளைப் பொறியில் அடக்குபவன். பிடித்த எலியை, நீர் நிரம்பிய வாலியில் போட்டு கொன்று கால்வாயில் தூக்கி எறிபவன். கொல்தல் அவன் தொழில், அவனது இயற்கை. ஒன்றை சிறை பிடித்து அதாவது ஆக்ரமித்து ருசி கண்டு நெகிழ்ந்திருப்பவன். அதை ஒரு கோளாறாகக் கூட சொல்ல இயலாது. அது அவனின் இயல்பு.
கதைச்சொல்லி பெண்ணின் கதையைப் புரிந்துக் கொள்ள, சிண்டாய் பாடலின் melancholy-யை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். சிண்டாய் பாடலின் மொழியாக்கம்;
Cindia - Siti Nur Haliza
Cindailah mana tidak berkias Mendendam unggas liar di hutan Hias cempaka kenanga tepian Hendaklah hendak hendak ku rasa (haih sayang) Janganlah jangan jangan ku hiba (haih sayang) Derita hati jangan dikenang Akar beringin tidak berbatas Cuma bersilang paut di tepi Gurindam lagu bergema takbir Tiung bernyanyi pohonan jati Laman memutih pawana menerpa Hendaklah hendak hendak kau rasa (haih sayang) Janganlah jangan jangan kau hiba (haih sayang) Hendaklah hendak hendak kau rasa (haih sayang) Janganlah jangan jangan kau hiba (aduh sayang) Derita hati jangan dikenang
| எந்த சிண்டாய் பட்டு கிழிசலில்லாமலில்லை, நூர்ப்பு ஆயிரமாய் அறுந்துள்ளன. எப்படி ஒப்பனை செய்துக்கொள்வேன்? எனது ஆடி ஆயிரமாய் நொறுங்கியுள்ளது.
காட்டுக்கோழியின் இரைச்சல், இருப்பது ஒரே வழி தடைகளாலானது. வைரம் பொறித்த தங்கத்தலையனை உள்ளது, உள்ளங்கையில் தலை வைத்து உறங்குகிறேன்.
ஆற்றுப்படியில் அழகு செண்பகமும் கனகாம்பரமும், வண்டு மொய்க்க மொட்டு பூத்திருந்தது, மெய்பார்த்தேன் என்றுதான் நினைத்தேன், மலர்கள் மொட்டவிழுமுன் கொட்டிவிட்டது.
அடைவேன் அடைவேன் அடைவேன் (என் அன்பே - ஆண் குரல் Chorus) சிகரத்தின் உச்சிதனை நான் அடைவேன் இல்லை இல்லை இல்லை, எனக்கு வலிமையில்லை, எட்டா உயரமது.
மறுக்கிறேன் மறுக்கிறேன் மறுக்கிறேன், என் சோகத்தை, (என் அன்பே - ஆண் குரல் Chorus) மன புண்களை நினைக்க மறுக்கிறேன். இல்லை இல்லை இல்லை, என் இச்சையில்லை, (என் அன்பே - ஆண் குரல் Chorus) பிரிந்திருப்பது சில காலம்தான்.
ஆலத்தின் வேர்களுக்கு எல்லையில்லை இருந்தும், கரையொரத்தில் பின்னியிருக்கவே முடிந்தது. என் படகோ மெழுகு, பாய்மரமோ காகிதம், கடலுக்குள்ளோ சுடு தீ.
Takbir (Azan) எதிரொலிக்க, தேக்கு மரத்தில் மைனாக்கள் குரிண்டாம் (கவிதை) பாடுகின்றன. பேசுபவன் சக்கரயாய், பதிந்ததோ மனதில் முட்களாய்.
நிலம் வெளுத்தது, தென்றல் வீசியது, நீல வானம், தொடரும் மேகம். எவரினாலும் விசும்பவில்லை, விடிவுக்காவே காத்திருக்கிறேன்.
அடைவேன் அடைவேன் அடைவேன் (என் அன்பே - ஆண் குரல் Chorus) சிகரத்தின் உச்சிதனை நான் அடைவேன் இல்லை இல்லை இல்லை, எனக்கு வலிமையில்லை, எட்டா உயரமது
மறுக்கிறேன் மறுக்கிறேன் மறுக்கிறேன், என் சோகத்தை, (என் அன்பே - ஆண் குரல் Chorus) மன புண்களை நினைக்க மறுக்கிறேன். இல்லை இல்லை இல்லை, என் இச்சையில்லை, (என் அன்பே - ஆண் குரல் Chorus) பிரிந்திருப்பது சில காலம்தான்.
அடைவேன் அடைவேன் அடைவேன் (என் அன்பே - ஆண் குரல் Chorus) சிகரத்தின் உச்சிதனை நான் அடைவேன் இல்லை இல்லை இல்லை, எனக்கு வலிமையில்லை, எட்டா உயரமது
மறுக்கிறேன் மறுக்கிறேன் மறுக்கிறேன், என் சோகத்தை, (என் அன்பே - ஆண் குரல் Chorus) மன புண்களை நினைக்க மறுக்கிறேன். இல்லை இல்லை இல்லை, என் இச்சையில்லை, (என் அன்பே - ஆண் குரல் Chorus) பிரிந்திருப்பது சில காலம்தான். |
சிண்டாய் பாடலையும் ஒரு முறை கேட்டுவிடவும்.
அடாம் கதைச்சொல்லி பெண்ணின் முதல் குழந்தை. இவன் ஆவாங்கின் பையன் இல்லை. கதைச்சொல்லி பெண்ணுக்கும் ஆவங்கும் பிறந்தவன் ஹாரிஸ். ஹாரிஸ் ஒரு முடிச்சு. கதைச்சொல்லி பெண் அடாமிடம் சிக்குண்ட முடிச்சு ஹாரிஸ். முதல் பையனிடம் அடாம் கனிவாக நடந்துக் கொள்ளவில்லை என்றும் கதைச்சொல்லி பெண் அறிவாள். இருந்தும் அங்கிருந்து அவளால் வெளி வர முடியாது. ஒரு விதவையை பெண் கேட்டு வருவது ஆவாங்தான். அந்த உறவில் அவளைச் சிக்க வைத்தது ஆவாங், வலை ஹாரிஸ். இது எந்த விதத்திலும் அடாவடி இல்லை. நீர் நிரம்பிய வாலிக்குள் மூச்சுதிணறி இறக்கும் எலியைப் போல, கதைச்சொல்லி பெண் அமைதியாக அனுபவிக்கும் சித்திரவதை.
இந்த பெண்ணினால், அந்த வலையிலிருந்து தப்ப முடியாது. சரியாக மாட்டிக்கொண்டிருக்கிறாள். அந்த சிகரத்தின் உச்சிதனை அவளால் எட்டவே முடியாது. வீழ்த்த முடியாத உயரம். செரி பழத்துக்கு ஆசைபடும் பறவையைப் போல் சிக்குண்டு மட்டுமே கிடக்க வேண்டும்.
இந்த தொல்லையானது, மாமிச வாடையுடன் குறியீடாக வருகிறது. இந்த பிரச்சனையும் சலனமும் அவளுடையது, அவளிடமிருந்துதான் அந்த வாடை வர முடியும்.
அவளுக்கு இங்கு இரண்டே வழிதான். ஒன்று மூச்சுத்திணறி இறப்பது, அல்லது திணறி திணறி வாழ்வதை ஏற்றுக்கொள்வது.
03.06.2025
கூலிம்.

Comments
Post a Comment