நூல் அறிமுகம் : Gateway to Indian Classical Literature
‘Gateway to Indian Classical Literature’ எனும் நூல் எனக்கு
இணையத்தில் அறிமுகமானது. இதில் இந்திய நூல்கள் நான்கு வகை காலகட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Ancient Literature, Pre-Medieval Literature, Medieval Literature &
Post-Medivial Literature. இதில்
Ancient Literatureஇல் ரிக் வேதம், உபநிடதங்கள், ராமாயணம், மஹாபாரதம், அர்த்தசாஸ்திரம்,
ஜாதக கதைகள், மனு ஸ்மிர்தி, திருக்குறள், பஞ்சதந்திரம், ஹீதோபதேசம் என்ற பட்டியல் இருந்தது.
இந்திய இலக்கியங்களை
அறிமுகப்படுத்துவதே இந்த நூலின் நோக்கம். ஒவ்வொரு நூலுக்கும் சிறு அறிமுகமும் நூல்
எழுதப்பட்ட காலமும் உள்ளது. இங்கு சில குழப்பங்கள் இருக்கிறதென நம்புகிறேன், முதலில்
பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்கள் எதன் வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன என்று
சரியாக தெரியவில்லை. உதாரணத்திற்கு, Ancient Literatureல் முதலில் வேதம் இருந்தது.
பட்டியலில் அடுத்து வந்த மனு ஸ்மிரிதியின் அறிமுகத்தில் ஒரு ‘commentary’ உள்ளது. அதில்
“What Manu says is medicine – The Vedas” என எழுதப்பட்டுள்ளது. இதனால், வேதத்துக்கடுத்து
மனு ஸ்மிர்தி வந்ததா இல்லை, மனுவுக்குப் பின் வேதம் எழுதப்பட்டதா என என்னைப் போன்ற
ஆரம்பநிலை வாசகர்களுக்குக் குழப்பத்தை உண்டு செய்தது.
நூலிலிருந்து
ஒரு பகுதி ‘comic’ வகையில் வரையபட்டும் இருந்தது. உபநிஷதங்கள் மொத்தம் 200க்கும் மேற்பட்டவை
உள்ளவனவாம். இதிலிருந்து இரண்டு உபநிஷதங்கள் (comic) சித்திர வடிவில் உள்ளது. வால்மிகியின்
பெயர்காரணத்தைப் படமாக வாசித்தேன். காளிதாசரின் மனைவி தன் மந்த கணவனை எண்ணி புலம்பவும்
காளிதாசருக்கு காளியின் அருள் கிட்டும் கதையை இங்குதான் படித்தேன்.
அதன்பிறகு,
ஒரு படைப்பும் படைப்பாளரும் வரிசையில் அடுத்து வந்த நூல்களை எப்படி பாதித்துள்ளதெனும் சிறு குறிப்பும் உள்ளது. ஜாதக கதைகளின் அறிமுகத்தை
வாசிக்கும் போது இப்படி ஒரு குறிப்பு; ஜாதக கதைகள் 19ஆம் நூற்றாண்டில்
தான் ஆங்கிலேயர்களால் ஆவணப்படுத்தப்பட்டது என்றும் அதற்கு முன் வாய்மொழியாகவே அடுத்த
தலைமுறையினருக்கு சொல்லப்பட்டு வந்ததாக இருந்தது. ஆனால் இந்த ஜாதக கதைகள் சிற்பங்களாக
Bharhut, Sanchi உத்திர பிரதேசத்தில் குகை சித்திரங்களாக இருப்பதாக குறிப்பு இருந்தது.
பயணங்களை கட்டுரைகளாக எழுதி வரும் நண்பர் மதுபாலாவிற்கு இந்த இடங்களும் இவற்றில் ஜாதக
கதைகளின் ஆதிக்கத்தையும் கூறினேன். அதற்கு அவர் அதைப் பற்றி தாமரை கண்ணன் மொழியாக்கம்
செய்த ஆனந்த குமாரசாமியின் கட்டுரைகளில் படித்துள்ளதாகவும் இந்த இடங்கள் ஏற்கனவே அவரது
to-go பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரின் கட்டுரையை எதிர்ப்பார்ப்போம்.
அதற்கடுத்து, குறிப்பிட்ட நூலைப்
படித்த அறிஞர்களின் விமர்சனமும் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஆர்யபத்தரைப்
பற்றி Einstein “We owe a lot to the Indians, who taught us how to count,
without which no worthwhile scientific discovery could have been made” என பதிப்பித்துள்ளனர்.
இந்த வரிகளைத் தேர்ந்தெடுத்த காரணம் ஆர்யபத்த-சித்தாந்தம் மக்களிடம் சென்று சேரும்
எனும் ஆசையில் நிகழ்ந்ததென நம்புகிறேன்.
இறுதியாக படைப்பிலிருந்து சில வாக்கியங்களை ‘quotation’ஆக
கொடுப்பது. இங்கு மஹாபாரதத்தைப் பற்றிய அறிமுகத்தின் quotation-இல் இந்த வாக்கியம்
அளிக்கப்பட்டிருந்தது.
What is found herein may also
be found in other sources,
What is not found herein does
not matter.
Explanation;
No matter what conditions you
encounter in life, your right is only to the works-not to the fruits thereof.
You should not be impelled to act for selfish reasons, nor should you be
attached to inaction.
-
Bhagavad Gita 2.47
இது கீதைக்கான அறிமுகத்தில் இருந்த
சிறு மேற்கோள். இந்த புத்தகம் இந்திய செவ்வியல் நூல்களின் இலக்கிய தொகுதி ‘canon’ என்று
கூறலாம். இந்த தொகுதியை ஏற்பதா இல்லை மறுப்பதா என்று பிறகு யோசிக்கலாம். இதை விட விரிவான
கிழக்குக்கான இலக்கிய தொகுதிகள் இருக்கின்றன. முதலில் இருப்பவற்றிற்கான அறிதலும் வாசிப்பும்
அவசியம். இந்திய செவ்வியல் இலக்கிய தொகுதியின் நுழைவு இந்த புத்தகத்தில் உள்ளது.
இந்த பணியை ஏற்று நடத்திய எழுத்தாளர்கள் பூர்நிமா பிள்ளை,
ஜொட்ஷனா பார்தி மற்றும் சித்திரங்களை வரைந்து (comics) உயிரூட்டிய ஓவியர் வி.கே சந்தோஷ்க்கு
நன்றி.
Gateway to
Indian Classical Literature, 2005 Asiapac Books, Singapore. ISBN981-229-427-9
Table of Contents of Gateway to Indian Classical
Literature
1. Ancient
Literature
a. Rig
Veda
b. Upanishads
c. Ramayana
d. Mahabharatha
e. Arthashastra
f. Jataka
Tales
g. Manu
Smriti
h. Thirukkural
i.
Panchatantra
j.
Hitopadesha
2. Pre-medieval
Literature
a. Kalidasa
b. Aryabhatta
c. Dohakosh
d. Kamba
Ramayanam
3. Medieval
Literature
a. Prithviraj
Raso
b. Amir
Khusro
c. Kabir
d. Padavali
e. Raidas
f. Ramacharida
Manasa
g. Padmavat
h. Sursagar
i.
Mirabai
j.
Amukta Malyada
4. Post-Medieval
Literature
a. Rahim
b. Ardha
Kathanak
c. Bahadur
Shah Zafar
d. Mirza
Ghalib
e. Bankim
Chandra Chatterjee
f. Gurajada
Venkata Appa Rao
#நூல்அறிமுகம்



Comments
Post a Comment