சிங்கா [9] : ஆசிரியர் மாணவர் அமர்வு

சிங்கா

[9]

ஆசிரியர் மாணவர் அமர்வு

பாடப்பகுதியில் ஒரு தனி அமர்வு ஆசிரியருக்கும் மாணவருக்குமானது. இந்த அமர்வில் ஆசிரியரும் ஒரு மாணவரும் இருப்பர். இதில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் செயற்குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளை விமர்சிக்கவும், பொதுவாக எழுத்தைப் பற்றி ஆலோசிக்கவும் இவ்வாறான தனி அமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அமர்வுக்கு முன், மாணவர்கள் தங்களின் படைப்புகளை ஆசிரியரிடம் அனுப்பலாம். நான் ஒரு சிறுகதையையும், என் நாவலின் சில அத்தியாயங்களையும் அனுப்பியிருந்தேன்.

***

He, the intelligent, ironical, civilized man;

I, the barbarian.

– Zorba the Greek

***

காட்சி 1: ஆசிரியர் தங்கும்விடுதி, NTU வளாகம், மதியம் 2:30

சுனில்

:

(கதவை டபாலென்று திறந்தபடி)

எப்படி இந்த வெயில்ல இந்த சட்டைய போட்டிருக்கீங்க?

பரி

:

Officeல இருந்து வரேன் சார்.

(வீட்டின் வரவேற்பரையில் அமர்ந்து)

தீபாவளி வாழ்த்துக்கள் சார். Sweets எடுத்துக்கோங்க. JBல ஒரு பஞ்சாபி கடை. ரொம்ப நல்லாயிருக்கும்.

சுனில்

:

Thanks

(Sweet டப்பாவை வாங்கி மேசையில் வைத்தார். கண்ணாடி மேசையில் ஏராளமான புத்தகங்கள்)

பரி

:

சிங்கப்பூர்-மலேசிய இலக்கியம் பற்றி என்ன சார் நினைக்கிறீங்க?

சுனில்

:

(எனக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்து)

சிங்கப்பூர்ல Leisureகு டைம் இல்ல. அறுவது வயசானாலும் தெருவ கூட்டுனு சொல்றாங்க. சிங்கைல, நாவல்கள் பெரியளவில வரல. இங்க expats எழுதுறாங்க. நாவல் எழுதனும்னா Leisure அவசியம். மலேசியாவில நாவல் மரபு உண்டு. நவீன்லாம் அந்த மரபு வரிசைல வர்றார்.

இங்க, எல்லாரும் தனியா செயல்படறாங்க. ஒட்டுமொத்தமா வழி நடத்த, ஒன்னு லதா செய்யனும் இல்ல, சித்துராஜ் செய்யனும்.

பரி

:

மலேசிய இலக்கியத்துல என்ன எதிர்பார்க்குறீங்க?


சுனில்

:

மலேசியாவோட நகரங்களை எழுதலாம். சிகண்டிலதான் மலேசியாவோட நகரம் வந்தது.

(தலையைப் பிடித்துக் கொண்டு)

போதுமான அளவு ஜப்பானியர்கள் காலம், தோட்டம் படிச்சாச்சு.

பரி

:

சார், எனக்கு Prosஅ விட உரையாடல்கள் நல்லா வருதுனு நினைக்கிறேன்.

சுனில்

:

வசனம் எழுதுங்க.

பரி

:

Shakespeareஅ போலயா?

சுனில்

:

(சற்றே சந்தேகத்துடன் என்னை நோக்கி ஆமென தலையசைத்தல்)

பரி

:

எனக்கு முதல்ல விமர்சகராகனும்தான் சார் விருப்பம். இப்ப ஒரு நல்ல வாசகியா இருந்தா ஒகேனு இருக்கு.  

சுனில்

:

வெங்கட் சாமிநாதன் கேள்விபட்டிருக்கீங்களா? பல துறைகளோட பின்னணியிலிருந்து இலக்கியத்துக்கு விமர்சனம் எழுதினார். அப்படி ஒரு விமர்சகராகனும்னு விரும்பினீங்கனா, அதற்கான கவனத்தை நான் அளிப்பேன். விமர்சனம் மட்டுமே செய்தவர்னா தமிழ் இலக்கியத்துல அவர்தான்.

பரி

:

(நிமிர்ந்து அமர்ந்து)

அப்ப எழுதக்கூடாதா?!

சுனில்

:

(கண்மூடி தலைசாய்த்து சிரித்தல்)

எழுதலாம்.

பரி

:

முழுக்க வாசிச்சுட்டுதான்ல சார் எழுதனும்?

சுனில்

:

(உதட்டை பிதுக்கி)

ஆயுசு பத்தாது.

படிச்சுட்டே எழுதுங்க. எழுதிட்டே படிங்க. எழுத்து தன்போக்குல வளரும்.

பரி

:

எங்க வாசிக்க தொடங்குறதுனு தெரியல சார். நிறைய இருக்கு.

சுனில்

:

ஒன்னும் பிரச்சனையில்ல. சிறந்த பத்து நாவல் அவசியம் வாசிச்சிருங்க. அதுக்கப்புறம் எழுதலாம். 

(நெற்றியில் தைலம் தடவுதல்)

கணேசன் சிறுகதை வாசிச்சேன். கதை ரொம்ப பழசா இருக்கு. வண்ணதாசன் தெரியுமா?

பரி

:

தெரியும். 

சுனில்

:

அவுங்க காலத்து கதை போல இருக்கு.

பரி

:

அந்த மனைவி ஒரு டாக்டர். அவுங்க கணவர் வீட்டுல இருக்குற பெண்களாள தம்பி மனைவியோட உயரத்துக்குக் கிட்டகூட நெருங்க முடியாது. அதுனால, தோற்றத்துல அந்த மனைவிய சிறுமைபடுத்துவாங்க. இததான் சொல்லவந்தேன். கதைல சரியா வந்ததா தெரியல.  

சுனில்

:

வாசகன கொக்கி போட்டு இழுக்கனும் பரிமித்தா. அவனுக்கு ஏதாவது Lead வைக்கனும்.

பொதுவா, குடும்ப அரசியல்கள் அழுகைலதான் காமிக்கனும்னு இல்ல. எரிச்சல், அலுப்பு இதிலயும் காட்டலாம்.

ஒருத்தர் கை ஓங்கியிருக்கும் போது இவ்வாறான சிறுமைப்படுத்தல் வந்தாலும், என் காருண்யத்துல தான் நீங்க இருக்குறீங்கற மாதிரியும் காட்டலாம்.

பரி

:

நாவல் சார்?

சுனில்

:

நாவல்னா நெடுஞ்சாலை மாதிரி போய்ட்டே இருக்க கூடாது. அங்கங்க speed breaker வேணும். ஆனா, உங்க கதை முழுக்க வெறும் speed breakerஆல ஆனது போல இருந்துச்சி. 

பரி

:

(இருவரும் ஒருத்தர் மாற்றி ஒருவர் சிரித்தல்)

பாவம் சார் நீங்க, எங்கையாவது விழுந்து, முகம் அடிப்பட்டுச்சா?

சுனில்

:

(புன்முறுவலித்தல்)

நிறைய தகவல்கள் இருக்கு. KTCCயலாம் நான் google பண்ணி தெரிஞ்சுப்பேன். தகவல்கள் நாவலுக்கு குறியீடா, அவசியமா வருதானு பாருங்க.

முதல் அத்தியாயத்துலயே நிறைய பேர்கள். ஒருவேளை அடுத்து வாசிச்சா பரவால்லயா இருக்கும்.

பரி

:

என்னா சார் ரொம்ப softஆ சொல்றீங்க. கடுமையா ஏதாவது சொல்வீங்கனு வந்தேன்.

சுனில்

:

நீங்க தாங்குவீங்களா? ஹ்ம்ம்

அது என்ன தலைப்பு முக நக நட்பது நட்பு. ரொம்ப பழசா இருக்கு.

பரி

:

இல்ல சார், முதல்ல ‘ரோஜாக்‘னு தான் வெச்…

சுனில்

:

ஓ. அந்த பஜ்ஜி மாதிரி, peanut sauce சம்பால்லாம் போட்டு..

பரி

:

ஹ்ம்ம், அது Indian fusioned சார். நான் சொல்ல வந்தது ஜாவா style. வெறும் பழங்கள், Brown sauce. கருப்புசீனில செஞ்சது. அடிப்படையில ரோஜாக்னா ஒரு கலவைனு அர்த்தம். ஏழு நண்பர்கள், ஏழு பழங்கள்.

சுனில்

:

இது நல்லாயிருக்கு. தமிழ்ல ரோஜாக்னு பெயர் கொண்ட ஒரு நாவல் வந்ததுனா, நான் எடுத்து படிப்பேன். இது புதுசா இருக்கு. ரோஜாக்னு பெயர் வைங்க.

பரி

:

ஒகே சார்.

சுனில்

:

சுருங்க எழுத பாருங்க. நிறைய கவிதை வாசிக்கனும். கம்பனைத் தாண்டி!

பரி

:

வள வளனு எழுதரென்னு சொல்றீங்க. அதானே…ஹ்ம்ம். யுவன்ன வாசிக்கிறேன் சார்.

(கண்ணாடி மேசையில் இருந்த தீராப் பகல் கவிதை தொகுப்பைக் காட்டி)

சுனில்

:

ஹ்ம்ம், இப்போதைக்கு யுவன்ன வாசிக்கலாம்.

நீங்க மொத்த நாவலயும் எழுதி அனுப்புங்க. நான் சொல்றேன்.

சாப்டுறீங்களா?


காட்சி 2: சமையலறை

சுனில்

:

(சமையலறையில் இருந்தபடியே)

Toast சாப்டுறீங்களா பரிமித்தா?

பரி

:

ஆஹ்ம் சார்.

(மேசையில் வைத்த Sweet டப்பாவை எடுத்து சமையலறையின் விளிம்பில் நிற்றல்)

உள்ள வர்லாமா சார்?

சுனில்

:

வாங்க பரிமித்தா

பரி

:

(சமையலறை countersல் பொடிகள், மசாலாக்கள், பருப்புவகைகள், அவைகளை உள்ளடக்கிய பெயர் எழுதி ஒட்டிய டப்பாக்கள்)

Sweetsஅ fridgeல வெச்சிடுறேன் சார். எறும்பு பட்டிரும்.

(Fridgeல் தோசை மாவு, இன்னும் பலவகையான பொடிகள்)

சமைப்பீங்களா சார்?

சுனில்

:

ஹ்ம்ம் ஆமா, இங்க வர்றதுக்கு முன்னாடி, இரண்டு மாசம் training. என்னாச்சுனா, அங்க அஞ்சு பேருனு, அளவு எண்ணி செஞ்சது. இங்க ஒரு ஆளு. கணக்கு சொதப்பிருது.

பரி

:

உங்க family இப்போ வந்துட்டு போனாங்களா சார்.

சுனில்

:

ஆமா, அதுகப்பறம் வெளிய போக சொல்லுது.

உங்க வீட்டுல எத்தனை பேர்?

பரி

:

அப்பா, retiree. அம்மா பூ கட்டுவாங்க, இப்போ, அப்பா அம்மாவுக்கு உதவியா இருக்கார். அண்ணன் space engineer, Canada settled. அக்கா teacher. இரண்டு பேர்க்கும் கல்யாணம் முடிஞ்சு. நான் இப்பதான் LLB முடிச்சேன். குறுங்கதைகள் இரண்டாம் வகுப்பு அப்போதான் graduation.

சுனில்

:

இப்பதான் முடிச்சீங்கள்ளா?

பரி

:

சொல்லிட்டுதான சார் போனேன்.

சுனில்

:

(ஒருவழியாக ரொட்டியைக் கண்டுபிடித்து ovenனுள் தினித்தல்)

ஹ்ம்ம், வீட்டுல மாப்பிளை பாக்குறாங்களா?

பரி

:

சுனில்

:

இந்த மலாய் சீனர் அப்படி கலப்பு திருமணம்லாம் பண்ணிக்கறாங்க மலேசியால?

பரி

:

இருக்கு சார். சீனர்கள்-தமிழ்ர்கள் பண்ணிப்பாங்க. அப்படி வந்த வம்சாவளிகள் இருக்கு. மலாய்காரர்கள கல்யாணம் பண்ணிக்கனும்னா மதம் மாறனும். அப்படியும் குடும்பங்கள் இருக்கு.

உங்க பொன்னு பேர் என்ன சார்?

சுனில்

:

(ரொட்டியில் peanut butter பூசி தருதல்)

சபர்மதி. பையன் சுதீர் சந்திரன்.

பரி

:

இந்த போர்களைப் பற்றி என்ன சார் நினைக்கிறீங்க?

சுனில்

:

உண்மைய சொல்லனும்னா, போர்கள கை கட்டி வேடிக்கை பார்க்கறதவிட நாம ஒன்னும் பண்ண முடியாது. இவை மாபெரும் இருள். இந்த இருள இலக்கியம் போக்கியிருக்க வாய்ப்பிருக்கு.

ரொட்டிக்கு tomato sauce வேணுமா?

பரி

:

ரொட்டிக்கு tomato sauce ஆ?

சுனில்

:

நல்லாயிருக்கும்.

நீங்க என்ன கருக்கள்லாம் வெச்சிருக்கீங்க எழுதலாம்னு.

பரி

:

JB town பற்றி எழுதனும். கோவிட் காலத்துல சிங்கைக்கு வேலைக்குப் போன மக்கள், எப்படி இரண்டு வருசம் இங்கேயே அடைஞ்சு கிடந்தாங்கனு. அப்றம், சிபில் கார்த்திகேசுனு ஒரு நர்ஸ் ஜப்பான் காலத்துல ஒரு சீன குடியிருப்பையே எப்படி காப்பத்துனாங்க, அவுங்க குடும்பம் எப்படி அழிஞ்சதுனு ஒரு ஐடியா இருக்கு.

நான் இப்படிதான் சார். சொல்லிட்டே இருப்பேன் எழுததான் மாட்டேன்.

சுனில்

:

(Charge போட்டிருந்த கைத்தொலைபேசியைப் பார்த்து)

அடுத்த அமர்வுக்கு ரமா வற்ரதா இருந்தாங்க, இப்ப வரலையாம். அதுனால, நான் கோவிலுக்குப் போகப்போறேன்.

பரி

:

(T-shirt, Jeans, கலைந்த தலைமுடியையுடைய அவரைப் பார்த்து வாயடக்கம் என்னவென்றால் தெரியாத நான்;)

இப்படியேவா?

சுனில்

:

இங்க வந்த பிறகுதான், கோவிலுக்குப் கண்டிப்பா வேட்டி கட்டிட்டு போகனுங்கறதெல்லாம் அபத்தம்னு தோணுது.

பரி

:

ஆமா, சார் நான் கேரளால பத்மநாபன் கோவில்கு போயிருந்தப்ப பஞ்சாபி சூட்தான் போட்டுருந்தேன். நான் புடவை கட்டலனு சொல்லி என்னைய வேட்டிய சுத்திக்க சொன்னாங்க. எல்லாரும் ஒரு மாதிரி பாக்கவும், எனக்கு ஏண்டா கோவிலுக்கு வந்தோம்ங்கற மாதிரி ஆயிடுச்சு.

சுனில்

:

வேட்டிய சுத்த சொன்னாங்களா? ஆண்கள் சட்டையில்லாம கோவில்கு போறதுக்கு ஒரு காரணம் இருக்கு. உங்கள ஏன் இப்படி சொன்னாங்க.

பரி

:

சொன்னாங்க…

(சாப்பிட்ட தட்டை கழுவுதல், மற்ற தட்டுகளையும் கழுவி வைத்தல்)

சுனில்

:

(கழுவுவதைப் பார்த்து, மேற்கொண்டு சில பாத்திரங்களை எடுத்து வைத்தல்)

பரி

:

வீட்டில் அண்ணன் இப்படி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்! என்று யோசித்தல்

சுனில்

:

அப்படியே பேசிட்டே போய்டலாம்.

(அறையிலிருந்து சில புத்தகங்களைக் கொண்டு வருதல்)

பரி

:

ஒரு படம் எடுத்துக்கலாம் சார்.

சுனில்

:

ஒகே. குரூப்ல போடுங்க.

பரி

:

நாளைக்குப் போடுறேன். இன்னிக்கி அக்காதான் குருப்ல ஹிரோ. எல்லாரும் அதல மும்முரமா இருக்காங்க.

சுனில்

:

அப்டியா என்ன விசயம்?

பரி

:

செவ்விலக்கிய மறுவாசிப்புனு ஒரு உரை. அவுங்க லெட்டர் இன்றைக்கு ஜெ தளத்துல வந்துருக்கு. தொன்மங்களை மறுஆக்கம் செஞ்ச நாட்டார் கதையில இருந்து வெண்முரசு வரைக்குமான ஒரு பட்டியல் கொடுத்துருக்காங்க. சிறப்பா இருக்கு. அதான்.

சுனில்

:

ஹ்ம்ம். அதனால ஒன்னும் இல்ல படம் போடலாம்.

உங்களுக்கு என்ன புக் வேணும்?

(நாளைய காந்தி, அன்புல்ல புல் புல், விஷக்கிணறு, அம்புப்படுக்கை, நீலகண்டம், எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது புத்தகங்களை சோபாவில் பரப்பி வைத்தல்)

பரி

:

இது என்ன சார் பழுவேட்டையர் – நரோபா

சுனில்

:

இந்த புக்ல அட்டையில இருந்து மொத்தமும் புனைவு. இத நான் ரொம்ப enjoy பண்ணி எழுதுனது.

பரி

:

அப்ப நீங்கதான் நரோபாவா! நாளைய காந்தி, அன்புல்ல புல் புல் வேண்டா semester examகு syllabusகுப் பதிலா இததான் படிச்சுட்டுகிடந்தேன்.

(மிச்ச புத்தகங்களைப் பார்த்தல்)

சார், நான் எல்லாத்தையுமே கேப்பேன் சார்.

சுனில்

 

(சிரித்து)

எடுத்துக்கோங்க பரிமித்தா.

பரி

:

சார் யுவன பாக்க கூலிம்கு வரீங்களா?

(புத்தகங்களை bagpackல் திணித்தல்)

சுனில்

:

முதல்ல வர்றதாதான் பிலேன். அதே நாள்ல இப்ப இளயவர்களுக்கு அடிப்படை சிறுகதை வாசிப்புனு ஒரு அமர்வு இருக்கு.

பரி

:

(கூன்வளைதல்)

சுனில்

:

சரி, உங்களுக்கு வாய்ப்பிருந்தா கண்டிப்பா அமர்வுல கலந்துகிட்டியிருப்பீங்க.

கிளம்பலாம்.

 

 

(இருவரும் வீட்டை விட்டு வெளியேறுதல்)




காட்சி 3: பயணம்

பரி

:

(இருவரும் வீட்டிலிருந்து நடந்து அருகில் இருக்கும் பேருந்து நிலையத்திற்குச் செல்லுதல்)

சிங்கை எப்படி சார் உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?

சுனில்

:

படிச்சு கொடுக்க பிடிச்சிருந்தது. மரபாச்சி இலக்கிய வட்டம்னு இருக்கு. அங்கையும் பிள்ளைகளுக்கு படிச்சு தரோம். ஆனா எப்படி ஜெலாம் பேசிக்கிட்டே இருக்கார் தெரியல. எனக்கு வாய் வலிக்கிது.

பரி

:

(சிரித்துவிட்டு, இருவரும் 961 பேருந்தில் ஏறி அமர்தல்)

சார், சங்கீதம் படிச்சவங்க வீட்டுல இருந்தா நமக்கு சட்டுனு சங்கீதம் புரியும்ல. Yes, of course power of the internet is there, but still இரத்தமும் சதையுமா இருந்தா உரையாடல் வழி பேசி கத்துக்கலாம்.

சுனில்

:

சங்கீதம்ல முதல் வேலையா பண்ண வேண்டியது, அத கேக்குறதுதான். இது இன்ன ராகம்னு தெளிவாக, கொஞ்சம் நேரம் எடுத்து கேக்கனும்.

குடும்ப பின்னனில இருந்து வரவங்க, சில படிகள் முன்னாடி இருக்காங்க. அவ்ளோதான். அதுக்கான நேரத்த கொடுத்தா அங்க சென்றடையலாம்.

 (தலையை வலப்பக்கமாக கீழ் சாய்த்து கைத்தொலைபேசியைப் பார்த்தல்)

பரி

:

நீங்க மிருதங்கம் வாசிப்பீங்கனு கேள்வி பட்டுருக்கேன் சார்.

சுனில்

:

ஒன்னும் இல்ல கிரிக்கெட் போய்ட்டு இருக்கு. Score பார்த்தேன்.

ஆமா, முற்றோதல்ல டமுக்கு டமுக்குனு அடிச்சிட்டு இருப்பேன்.

பரி

:

சார் என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க ஒரு வித்வானுல நா நினைச்சிட்டு இருந்தேன்.

சுனில்

:

இல்ல, அதான். கத்துகிட்டேன். அரங்கேற்றம் முடியறதுக்குள்ளதான்…

பரி

:

சார் இந்த மனோதர்மம்னா என்ன? ரொம்ப பெரிய வார்த்தை மாதிரி இருக்கே?

சுனில்

:

(சிரித்துவிட்டு)

இப்போ இந்த பஸ் பயணம். நான் construction பாக்குறேன், நெரிசல் இப்படி இருக்கு. நீங்க உங்க பஸ் பயணத்த சொல்லும்போது அது உங்களுடைய பயணம், உங்க மனோதர்மம்.

ஒவ்வொரு பாடகரும் அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரே ராகத்தை ஆலாபனை பண்ணுவாங்க.

பரி

:

சார், எனக்கு ப. சிங்காரத்தோட புயலிலே ஒரு தோனி.. ஏன் அவர் காலத்துல சென்றடையிலனு வகுப்புல சொன்னப்போ, ஹ்ம்ம்.. அத்வைதம்…அது என்னாதுனு புரியும்படி சொல்றீங்களா பிலிஸ்?

சுனில்

:

ஒரே சூரியன். அதுக்கு கீழ ஆயிரம் நீர் நிரம்பிய மட்பாண்டம். ஒவ்வொரு மட்பாண்டத்தலையும் ஒவ்வொரு சூரியன் பிரதிபளிக்கிது.

 

 

(சார் அவ்வளவு தான் சொன்னார். த்வைதம் என்றால் என்ன என்பது இப்போதும் எனக்குத் தெரியாது. புயலிலே ஒரு தோனி & கடலுக்கு அப்பால். இரண்டையும் வாசித்த பின் நான் இப்படி புரிந்துக் கொள்கிறேன்;

 மணிக்கொடி எழுத்தாளர்கள் காலத்தில் எழுதியவர்தான் ப.சிங்காரம். இருந்த இடங்கள் போலினேசியா. மணிக்கொடி இருந்தது தமிழகத்தில். அவர்களோ இலக்கியத்தில் புது மலர்ச்சிக்கு ஒருவருக்கொருவருடன் அறிமுகமாயிருந்தனர். ப.சிங்காரம் அவர்களுடன் தொடர்பில் இருந்தும் தனித்திருந்தார். ஆங்கில நூல்களை வாசித்து விட்டு, அதன்வழி அவர் கண்டதைத் தனக்குரிய வடிவத்தில் தமிழில் எழுதினார். அவரைப் பொறுத்த வரை அது அவரது வடிவம். பிறர் அவரின் படைப்புகள் வடிவ ஒழுங்கு இல்லையென பொருட்படுத்தவில்லையெனில், ப. சிங்காரத்தின் படைப்புகள் பிழையாகிவிடாது. அவரின் சூரியன் பிறருக்கானது இல்லாமல் இருக்கலாம், அவரது சூரியன், அவர் கண்டனைந்தது,)

பரி

:

சார், நவீன் சார் ஒருமுறை சொல்லிருக்கார், நீங்க எழுதுன விஷக்கிணறு அவர் எழுதியிருக்க வேண்டியதுனு. Miss பண்ணதா சொன்னார்.

சுனில்

:

அப்டியா? அந்த ஒரு கேள்விதான். பூகிஸ் மன்னனுக்கு எப்படி…

(Pioneer இரயில் நிலையத்தை வந்தடைதல்)

ஆமா, உங்களால மலாய் மொழிய நேரடியா வாசிக்க முடியும்ல?

(சற்றே ஏக்கமாகப் பார்த்தல்)

பரி

:

(இருவரும் Jurong East செல்லும் இரயிலுக்கு Pioneer ரயிலிலிருந்து தாண்டுதல். மக்கள் நெரிசல்)

 ஆமா, உங்களால, நேரடியா சமஸ்கிருதம் வாசிக்க முடியும்ல? நான் அன்னிக்கு வான்மீகம் படிக்க திணறிக்கிட்டு இருந்தேன்.

(ஒருவழியாக, ஜூரோங் ஈஸ்ட் MRT ரயிலில் ஏறுதல்)

பரி

:

(பயணம் முடியபோவதை எண்ணி, வலிந்து உரையாடலைத் தொடங்குதல்)

சார், ஆரோகணம் எனக்கு சரியா புரியல. ஏன் எருமைலாம் வருது?


சுனில்

:


எருமை, நாய் எமனின் குறீயீடு. தர்மன் கடைசியில சொர்கத்தைத் தேர்ந்தெடுக்கிற ஒட்டி எழுதுனது.

பரி

:

ஓ. (ஊர்த்துவ தாண்டவத்தை மனதில் நினைத்துக் கொள்ளுதல்)

சுனில்

:

(இரயில் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுதல்)

காலன் வர மாதிரி நிறைய கதைகள் இருக்கு.

இப்படி ஒரு கதை. காலன் ஒரு நாள் ஒருத்தன குரு குருனு பாத்துக்கிட்டே இருந்தாராம். அந்தாளுக்கு இவன் காலன்னு தெரியவே நேரமாச்சாம். ஒருவழியா தனக்கு சாவு நெருக்கிருச்சுனு பயந்துட்டானாம். பயந்து வீட்டுக்குள்ள போய்ட்டானாம். அவன் பின்னாடியே காலன் வராரு. ‘நீ இங்க இருந்தா தானே என்னை கொல்லுவனு’ சொல்லி, அவன் அடுத்த ஊர்க்கு கிளம்பி போய்ட்டானாம். அப்ப காலன் வழில இருந்த இன்னொர்த்தர்ட்ட இப்ப இவர் எங்க கிளம்பி போறார்னு கேட்டார். அடுத்த ஊர்னு இவர் பதில் சொல்லவும், ‘அதானே எனக்கு அவன அந்த ஊர்ல கொல்ல சொல்லிதான எழுதியிருக்கு இங்க என்ன பண்றானு பாத்துட்டு வந்தேன்’னு சொன்னாராம்.

 

 

(இருவரும் வாய் விட்டு சிரித்தல், இரயிலில் சக பயணியர்கள் எங்கள் இருவரையும் வேறு மாதரியாகப் பார்த்தல். கெடுபிடியான சிங்கையில் சிரிப்புச் சத்தமா?)

பரி

:

தீபாவளி விருந்து get-together இருந்தா சனி-ஞாயிறு போல வைக்க சொல்லுங்க சார்.

(Jurong East இரயில் நிலையத்தை அடைதல்)

சுனில்

:

சரி. பார்ப்போம் பரிமித்தா.

பரி

:

கிளம்புறேன் சார். பாய்.

சுனில்

:

(கைகளை இரயிலின் இரும்பு தூணில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பித்தனைப் போல தலையைக் கணமாக ஆட்டி ஆட்டி விடைதருதல்)

பரி

:

(வழக்கமாக சீரியசாகவே பார்த்தவரை திடீரென சிரித்து பார்த்ததில் பயந்து கிராஞ்சிக்குச் செல்லும் இரயிலில் ஏறுதல்)



பி.கு.: இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சாரின் பதில்கள், அவர் சொல்லி நான் புரிந்துக்கொண்டவையாகவும் இருக்கலாம். 




Comments