சிங்கா [3] அயல் குறுங்கதைகள் - கடிதம்

அன்புள்ள பரிமித்தா

சிங்கா பதிவில் சுனில் அண்ணா அமர்வில் பகிர்ந்திருந்த குறுங்கதைகளின் மேலான விவாதத்தின் ஒருபகுதியை எழுதியிருந்தீர்கள்நன்றாக இருந்ததுஅதில் பர்ன்ஸ் என்ற குறங்கதையை பற்றிய கருத்து தரப்புகளை கூறியிருந்தீர்கள்உங்கள் வக்கீல் வாதத்தையும் சேர்த்து :)

 

அந்த கதையை குறித்து யோசிக்கையில் இரண்டு விஷயங்கள் தோன்றியதுஒன்றுஎந்த ஒரு அசாதாரணமான சம்பவத்திற்கு அல்லது அப்படியாக நாம் நினைக்கும் சம்பவங்களுக்கு பொய்யாகவோ அல்லது மெய்யாக ஆராய்ந்தோ தர்க்கரீதியான தொடர்புறுத்தல் பின்னலை உருவாக்கி கொள்ள வேண்டியிருக்கிறதுஇந்த கதையிலேயே அவன் ஜனாதிபதியை கொன்றேன் என்று சொல்வது அரசு நிறுவனத்தை பொறுத்தவரை நம்ப முடியாததுஅதன் வல்லமையை கேள்விக்குறியாக்குவதுஎனவே நீங்கள் சொன்ன வாதப்படி எல்லாம் நிகழ்த்தப்படுகிறதுஇரண்டுஅவன் சலிப்புற்ற வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒரு சாகசத்தனமான வரலாற்று கதாபாத்திரமாக மாற விரும்புகிறான்இந்த எண்ணம் எல்லோரது பகற்கனவுகளிலும் உள்ளது தான்என்ன நாம் நினைப்பது போல சாகசம் வெற்றியையும் குதூகலத்தையும் மட்டுமே கொண்டதல்லஇழப்புகளையும் தோல்விகளையும் திரும்ப முடியா சுழல்களையும் சேர்த்தே உள்ளடக்கியது என்பது வாழ்க்கை எதார்த்தமாக இருக்கிறதுஇக்கோணத்தையும் இக்கதையில் இருந்தே உருவாக்கி கொண்டேன் என்று சொல்லலாம்.

 

அப்புறம் அந்த இரண்டாவது கோணத்தை சொல்கையில் யுவன் சந்திரசேகரின் மணற்கேணி தொகுப்பில் இருந்த ஒரு கதையும் ஞாபகம் வருகிறதுஒரு கதையில் கிருஷ்ணன் சொல்வான்கல்லூரி படிப்பின் போது தான் பிறந்த காலக்கட்டத்தை நினைத்து வருந்தியதாகவும் ஜமீன்களின் காலத்தில் பிறக்க விரும்பியதாகவும்இவன் விருப்பம் போலவே ஜமீன் போன்ற ஒருவரிடம் பாடிக்காட்ட சந்தர்ப்பமும் கிடைக்கும்அப்போது அந்த பகற்கனவு யதார்த்தத்தில் எத்தனை குரூரமானதாக இருக்கிறது என்று தெரியும்இக்கதையை விலாவரியாக அறிய தொகுப்பை வாசிக்கவும்முடிந்தால் படமெடுத்து வாட்ஸப்பில் அனுப்பி வைக்கிறேன்.

 

அன்புடன்

சக்திவேல்

 

பி:கு புதிதாக கடிதம் எழுதியிருக்கிறேன் என்று கேட்பீர்கள்கோர்வையாக சிந்தித்து சொல்ல நினைப்பவற்றை தெளிவுடன் சொல்வதற்கு இப்படி எழுதுவது எனக்கு வசதியாக இருக்கிறதுஇங்கே இப்போது விடிகாலை நேரம்தூக்கம் கலைந்துவிட்டதுகாலையில் எழுத வேண்டியுமாய் தோன்றியதுஅதனால் தான்மற்றபடி வேறொன்றுமில்லை.

Comments